மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி – தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று சாதனை

0
101
news

தூத்துக்குடி

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்கள்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி நெல்லையில் நடைபெற்றது. இப்போட்டியில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். போட்டியானது, பி.வி, சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என அனைத்து வயது பிரிவுகளிலும் நடைபெற்றது.

போட்டியின் முடிவில், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவிகள் சிவஅகல்யா, கோமுபிரியா ஆகியோர் தங்கப்பதக்கமும், தர்ஷினி வெள்ளிப் பதக்கமும், சிவமுகல்யா, முத்துச்செல்வி, மரிய மனிஷா, மரிய மோனிகா ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

பெல் மெட்ரிக் பள்ளி ஜெசிகா வெள்ளிப் பதக்கமும், ஜெரின் மைக்கேல், மகாராஜா ஆகியோர் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளனர். ஈஷா வித்யாலயா பள்ளியை சேர்ந்த பானுமதி வெள்ளிப் பதக்கமும், எக்ஸ்.என் மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த பிளஸ்ஸி வெண்கல பதக்கமும் மற்றும் பிற பள்ளிகளை சேர்ந்த கிறிஸ்டினா, நந்தனா, எபினேசர் சாமுவேல் ஆகியோர் தங்கப் பதக்கமும், தருண், பேச்சிமுத்து, மதுமிதா, அரவிந்த்குமார் ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாநில அளவிலான இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் அதிக புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தினையும், பெண்களுக்கான பிரிவில் 3வது இடத்தினையும் பெற்றுள்ளது.

மாநில அளவில் அதிகபுள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் பயிற்சியாளர் செல்வம் கிறிஸ்டோபர் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here