வருகிற பனிமய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

0
17
WhatsApp Image 2019-07-13 at 2.24.25 PM

வருகிற 26.07.2019 முதல் 05.08.2019 வரை நடைபெறவுள்ள பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (13.07.2019) பனிமய மாதா கோவில் வளாகத்தில் உள்ள அரங்கில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாதா கோவில் வளாகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக புறக்காவல் நிலையம் அமைத்திடுதல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தல் சாலையோரக் கடைகள் ஒரு புறம் மட்டும் அமைத்திடுதல் ஆங்காங்கே சி.சி.டி.வி கேமராக்கள் அமைத்து அவை புறக்காவல் நிலையத்தில் உள்ள ஒளித்திரை முலம் கண்காணிக்கும் வகையில் அமைத்தல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் முக்கிய அறிவிப்புகளை தெரிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி அமைத்திடுதல் தீயணைப்புத்துறையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைத்திருத்தல் மருத்துவர்கள் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக்குழு இருக்கும் வகையிலும் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் இருக்கும்படியும் பொது மக்கள் நடமாடும் பகுதிகளில் தற்காலிக மின் விளக்குகள் அமைத்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டம் தூத்துக்குடி மாநகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மற்றும் பனிமய மாதா கோவில் பங்கு தந்தை திரு. குமார் ராஜா அவர்கள் முன்னிலையிலும் நடை பெற்றது. இக்கூட்டத்தில் குழந்தைகள் பள்ளி பங்கு தந்தை திரு. வில்லயம் சந்தானம் திரேஸ்புரம் பங்கு தந்தை திரு. நோயல் தீயணைப்பு துறையினர் மின் வாரியத்தினர் சுகாதாரத்துறையினர் மாநகராட்சிதுறையினர் உணவு பாதுகாப்பு துறையினர் உட்பட சம்மந்தப்பட்ட அனைத்து துறையினரும் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர காவல் ஆய்வாளர்கள் மாவட்ட தனிப்பிரிவு திரு. பாலமுருகன் தென்பாகம் திரு. ஜீன் குமார் மத்தியபாகம் திரு. ஜெயப்பிரகாஷ் முத்தையாபுரம் திரு. சிவசெந்தில்குமார் தெர்மல் நகர் திரு. ரஞ்சித்குமார் தாளமுத்து நகர் திரு. சார்லஸ் தென்பாகம் குற்றப்பிரிவு திரு. கிருஷ்ணகுமார் மத்தியபாகம் குற்றப்பிரிவு திருமதி. வனிதா போக்குவரத்துப்பிரிவு திரு. சிசில் ஆயுதப்படை திரு. மகேஷ் பத்மநாபன் ஆகியோர் உட்பட உதவி ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here