தலைவர்கள் சிலைகளுக்கு எஸ்.பி.சண்முகநாதன், எஸ்.டி.ஆர்.விஜயசீலன் ஊர்வலமாக சென்று மாலை அணிவிப்பு

0
152
admk news

தூத்துக்குடி, மார்ச்.15:

தூத்துக்குடியிலுள்ள தலைவர்களின் சிலைகளுக்கு எஸ்.பி.சண்முகநாதன், எஸ்.டி.ஆர்.விஜயசீலன் ஆகியோர் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ.,வும், தூத்துக்குடி தொகுதியில் தமாக வேட்பாளராக அக்கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலனும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள் இருவரும் நேற்று தூத்துக்குடி மாநகரிலுள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., காமராஜர், பெரியார், அம்பேத்கார், குரூஸ்பர்னாந்து, முத்துராமலிங்கதேவர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், அதிமுக சார்பில், அமிர்தகணேசன், வீரபாகு, பிரபாகர், வெயிலுமுத்து, நடராஜன், மனோஜ்குமார், பொன்ராஜ், ராமகிருஷ்ணன், பாஜக சார்பில் பால்ராஜ், வழக்கறிஞர்கள் மகேந்திரன், சுரேஷ்குமார், வாரியர், அசோகன், பழனிவேல், தமாகா சார்பில் ரவிக்குமார், சுந்தரலிங்கம், முருகன், அருண்நேருராஜ், பொன்ராஜ், முரளிகார்த்திக், கணேஷ், அய்யாத்துரை உட்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here