கோவில்பட்டியில் 10 ஆண்டு சாதனை துண்டுபிரசுரங்களுடன் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

0
59
admk

கோவில்பட்டி,மார்ச்.16:

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு போட்டியிடுகிறார் அவரை ஆதரித்து அதிமுக கட்சியினர் மற்றும் அமைச்சரின் துணைவியார் இந்திரா காந்தி தலைமையில் கிருஷ்ணா நகர் பகுதியில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ 10 ஆண்டுகளாக செய்த சாதனைகள் அடங்கிய சாதனை விளக்க துண்டுபிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி,

முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சுப்புராஜ்,தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய தலைவர் பிரதீப், பாசறை வடக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மகளிர் அணி இணைச் செயலாளர் சுதா, மாணவரணி இணைச்செயலாளர் விக்னேஷ், இனாம்மணியாச்சி பஞ்சாயத்து துணைத்தலைவர் ரேவதி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here