மாநில சிலம்பம் போட்டி நாலுமாவடி காமராஜ் பள்ளி மாணவர்கள் சாதனை

0
99
nazareth news

நாசரேத், மார்ச்.18:

திருப்பூரில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனைப் படைத் துள்ளனர்.

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான 39வது தமிழ்நாடு ஜூனியர் மற்றும் சீனியர் சிலம்பாட்ட போட்டி நடந்தது. போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் நாலுமாவடி காமராஜ் மேலநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி மதுமிதா 38 முதல் 42 எடை பிரிவில் முதலிடத்தையும், மாணவர் அப்துல் முத்தலிப் 50 முதல் 54 எடை பிரிவில் 2ம் இடமும் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து திருப்பூரில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவி மதுமிதா 3ம் இடத்தையும், மாணவர் அப்துல் முத்தலிப் 2ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர் மற்றும் மாணவியையும், பயிற்சியாளர் ஸ்டீபன், உடற்கல்வி இயக்குனர் ஜெயக்குமார், உடற்கல்வி ஆசிரியை அமுதசகிலா ஆகியோரை பள்ளி தலைவர் அழகேசன், பள்ளி செயலர் நவநீதன், கல்வி கமிட்டி உறுப்பினர்கள், ஊர் பெரியவர்கள், தலைமையாசிரியர் திருநீலகண்டன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here