அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி ஆட்டோவை இழுத்த 6வயது சிறுமி

0
289
kovilpatti

கோவில்பட்டி,மார்ச்.19:

100 சதவீத வாக்கு என்பது நமது இலக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி கோவில்பட்டியில் ரவீணா என்ற 6 வயது சிறுமி தனது உடலில் கயிறு கட்டி ஸ்கேட்டிங் மூலமாக 1 கிலோமீட்டர் தூரம் ஆட்டோவை இழுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 100சதவீதம் பொது மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி 6வயது 1ம் வகுப்பு மாணவி ரவீணா உடல் மூலம் கயிறு கட்டி ஸ்கேட்டிங் மூலமாக ஆட்டோவை இழுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கோவில்பட்டி காந்திமைதானம் அருகே சாய்தேவ் சாரிடபுள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவில்பட்டி டி.எஸ்.பி. கலைக்கதிரவன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மாணவி ரவீணா தனது உடலில் கயிறு கட்டி ஸ்கேட்டிங் மூலமாக ஆட்டோவை கட்டி சுமார் 1கிலோ மீட்டர் தூரம் ஆட்டோவினை இழுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மாணவி இழுந்த ஆட்டோவில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், 100 சதவீத வாக்கு என்பது நமது இலக்கு என்ற வாசகங்களும் இடம் பெற்று இருந்தன. இறுதியில் மாணவி ரவீணாவை டி.எஸ்.பி.கலைக்கதிரவன் பரிசு வழங்கி பாராட்டினர்.இதில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார், தொழில்அதிபர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிரஸ்ட் நிறுவனர் சைலஜா , செயலாளர் வழக்கறிஞர் கருப்பசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் ராஜகோபால், ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பாக்கியராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட சிறுமி ரவீணாக்கு பரிசு வழங்கபட்டது. ரம்யாவிஜயன், வரவேற்றார். ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கனகராஜ், நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here