தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6சட்டமன்ற தொகுதிகளில் 69 மனுக்கள் தள்ளுபடி

0
135
election

தூத்துக்குடி, மார்ச்.20:

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6சட்டமன்ற தொகுதிகளில் 69 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந் தேதி துவங்கி தொடர்ந்து 19ம் தேதி வரை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 204 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி, விளாத்திகுளம் தொகுதியில் 23 பேரும், தூத்துக்குடியில் 30 பேரும், திருச்செந்தூரில் 32 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 31 பேரும், ஓட்டப்பிடாரத்தில் 26 பேரும், கோவில்பட்டியில் 38 பேரும் ஆக மொத்தம் 180 வேட்பாளர்கள் சார்பில் கூடுதல் மனுக்களையும் சேர்த்து மொத்தம் 204 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்முடிவில், விளாத்திகுளத்தில் 16 பேரும், ஓட்டப்பிடாரத்தில் 18 பேரும், திருச்செந்தூரில் 19 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 27 பேரும், தூத்துக்குடியில் 26 பேரும், கோவில்பட்டியில் 29 பேரும் என மொத்தம் 135 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here