ஊரக திறனாய்வுத் தேர்வு கொம்மடிக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் வெற்றி

0
44
sathankulam news

சாத்தான்குளம், மார்ச்-21:

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை எஸ்.எஸ்.என் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊரகத்திறனாய்வுத் தேர்வில் 4பேர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஊரகப்பகுதி மாணவர்களுக்காக வருடம்தோறும் திறனறித்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கொம்மடிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஊரகத்திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். நிகழாண்டு நடைபெற்ற தேர்வில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் மாலதி, பூவைசலேட்ஜெஸிந்தா, மாணவர்கள் ஆகாஷ், நிதிஷ்காத்திகேயன் ஆகிய நான்கு பேரும் தேர்ச்சி பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் வரையில் ஆண்டுதோறும் ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவ ,மாணவிகளையும் ,பயிற்சி அளித்த கணித பட்டதாரி ஆசிரியை தயாவதி ரோஜா புஷ்பம் ஆகியோரை தலைமை ஆசிரியை ஷிபாசினி அமுதா பாராட்டி பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here