சாத்தான்குளம் பகுதியில் 600 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை – காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசிஅமிர்தராஜ் உறுதி

0
55
congress voorvasi

சாத்தான்குளம், மார்ச்.22:

சாத்தான்குளம் பகுதியில் 600 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை அமைத்து இப்பகுதியில் படித்த இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் வாக்கு சேகரித்தார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் சாத்தான்குளம் ஒன்றிய பகுதியில் தனக்கு ஆதரவு கேட்டு பிரசாரத்தை தொடங்கினார் .பிரசார தொடங்கிய அவர் திறந்த வேனில் நின்று கொண்டு பொதுமக்களிடம் கை சின்னத்தில் தனக்கு ஆதரவு தருமாறு கேட்டார். தொடர்ந்து அவர் பிடானேரி, டி கே சி நகர், சமத்துவபுரம், தேரிபனை, அச்சம்பாடு, எழுவரைமுக்கி, ஆனந்தபுரம், பழங்குளம், கருவேலம்பாடு, செட்டிகுளம், நொச்சிகுளம்:, கோமானேரி, கழுங்கு விளை, துவர் குளம், கொம்பன் குளம், நெடுங்குளம், சொக்கலிங்கபுரம், விஜனூர், பண்டாரபுரம் ஆகிய பகுதியில் நேரடியாக சென்று பொதுமக்களிடம் கை சின்னத்தில் வாக்கு தருமாறுஆதரவு திரட்டினார்அப்போது அவருக்கு செல்லும் இடங்கள் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

தோப்பூரில் அவர் பேசியதாவது; 10 ஆண்டுகளாக எந்த வளர்ச்சித் திட்டங்களும் இல்லாமல் இந்த பகுதி பின்தங்கிய பகுதியாக உள்ளது.. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் 600 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி சிப்காட் தொழிற் சாலை அமைக்கப்பட்டு அதில் பன்னாட்டு நிறுவனங்கள்; தொழில் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். , அதில் இப்பகுதியில் படித்து வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுப்பேன். . உங்களுடன் பக்கபலமாக நின்று அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் உங்களுடைய எந்த குறை இருந்தாலும் உடனடியாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வேன். ஆதலால் தமிழகத்தில் விடிவு ஏற்பட வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி கை சின்னத்தில் வாக்களித்துஎனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றார்.

அப்போது அவருடன் மாநில வழக்குரைஞர் பிரிவு இணைத் தலைவர் மகேந்திரன், மாவட்ட துணை தலைவர் சங்கர்; நகர காங்கிரஸ் தலைவர் வேணுகோபால், தெற்கு மாவட்ட வழக்குரைஞர் பிரிவு தலைவர் வில்லின்பெலிக்ஸ், சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப், நகர செயலாளர் இளங்கோ, ஒன்றிய கவுன்சிலர் பிச்சிவிளை சுதாகர்:, மாவட்ட பொருளாளர் எடிசன், கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் ஜோசப்அலெக்ஸ், மதிமுக கலைபிரிவு மாவட்ட செயலாளர் மகாராசன்,; நகர செயலாளர் ஜெயராஜ்; விடுதலை சிறுத்தைகள் கட்சிவிவசாய தொழிலாளர் இயக்க மாவட்ட அமைப்பாளர் கருவை சுகுமார்;, மாவட்ட காங்கிரஸ் பிரதிநிதி யோக பாண்டியன்; வடக்கு வட்டார பொருளாளர் பாஸ்கர்; பண்டாரபுரம் ஊராட்சி தலைவர் பாலசிங்;, சாலை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனி பாஸ், மேற்கு வட்டார்த தலைவர் சக்திமவேல்முரருகன், ; ஒன்றிய கவுன்சிலர் ப்ரெனிலா கார்மல்,; மாவட்ட திமுக பிரதிநிதி அலெக்ஸ் பிரிட்டோ; முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சரவணன், நகர காங்கிரஸ் துணை தலைவர் கதிர்வேல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here