எஸ்.டி.ஆர்.விஜயசீலனுக்கு விஸ்வகர்மா சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு

0
319
sdr news

தூத்துக்குடி,மார்ச்.25:

தூத்துக்குடி தொகுதி தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலனுக்கு விஸ்வகர்மா சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

தூத்துக்குடி சட்ட மன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். அவர் நேற்றுக் காலை கோமதிபாய் காலனி, குட்டி சங்கரபேரி, ஸ்டேட்பேங்க் காலனி, சக்தி விநாயகர்புரம், எழில்நகர், கந்தசாமிபுரம், அம்பேத்கர்நகர், சுந்தரவேல்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர், மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் வலிமையான இந்தியாவை உருவாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் மத்தியரசுடன் இணக்கமான ஆட்சி நடந்தால்தான் தமிழகத்தை வளமான தமிழகமாக உருவாக்க முடியும். தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் கொள்கையும் வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பதுதான். எனவே தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர்ந்திட எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். மீண்டும் அதிமுக ஆட்சி வந்தவுடன் அனைவருக்கும் இலவச கேபிள் இணைப்பு வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் மாதம் ரூ.1500 வழங்கப்படும். 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் காலையில் டிபன் வழங்கப்படும் என்றார்.

இதில் அதிமுக பகுதிசெயலாளர் பொன்ராஜ், வட்டச்செயலாளர் முருகன், நிர்வாகிகள் சொக்கலிங்கம், அன்னபாக்கியம், ராஜகண்ணா, இன்பராஜ், ஜோதிமணி, பாஜக சார்பில் மாவட்ட தலைவர் பால்ராஜ், நிர்வாகிகள் செல்லப்ப்பா, மனோகரன், கனகராஜ், வினோத், தமாகா சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், மாநகர தலைவர் ரவிக்குமார், மாணவரணித் தலைவர் பொன்ராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தமாகா வேட்பாளர் விஜயசீலனை தேர்தல் காரியாலயத்தில் விஸ்வகர்மா சங்க நிர்வாகிகள் கமலஹாசன் தலைமையில் சந்தித்துஆதரவு தெரிவித்தனர். அவர்களுக்கு விஜயசீலன் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here