தூத்துக்குடியில் தமாகா வேட்பாளர் எஸ்.டிஆர்.விஜயசீலன் பெரிய பள்ளி வாசல் பகுதியில் வாக்கு சேகரிப்பு

0
57
admk

தூத்துக்குடி, மார்ச்.27:

தூத்துக்குடி தொகுதி தமாகா வேட்பாளர் எஸ்.டிஆர்.விஜயசீலன் பெரிய பள்ளி வாசல் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் நேற்று காலை மீளவிட்டான் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து பாலையாபுரம், சில்வர்புரம், வி.எம்.எஸ்.நகர்,சின்னக்கண்ணுபுரம் ஆகிய பகுதிகளில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

பின்னர் தூத்துக்குடி டபுள்யூ.ஜி.சி.ரோடு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள தர்க்காவில் மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தார். அதன் பின்பு அப்பகுதியில் தொழுகைக்கு சென்று திரும்பியவர்களிடம் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சிகளில் அதிமுக சார்பில் தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் அமிர்தகணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வீரபாகு, மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் பிரபாகர், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் தனராஜ், வழக்கறிஞரணி இணைச்செயலாளர் கோமதிமணிகண்டன், துணைசெயலாளர் சரவணபெருமாள், பகுதி செயலாளர் ஜெயகணேஷ், மத்திய பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயராஜ்,

மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் மைதீன், மாவட்ட இணைச்செயலாளர் இம்ரான், மாவட்ட பொருளாளர் நாகூர்பிச்சை, மத்திய வடக்கு பகுதி செயலாளர் அசன், அன்வர், முத்துவாப்பா, இஸ்மாயில், ரியாஸ், பாபு,சுலைமான், வட்டச்செயலாளர்கள் முருகன், கொம்பையா, ஜனார்த்தனன், பாஜக மாவட்ட தலைவர் பால்ராஜ், மண்டல தலைவர் கனகராஜ், பொதுசெயலாளர் செல்லப்பா, மனோகர், வினோத், தமாகா சார்பில் மாநகர தலைவர் ரவிகுமார், வட்டாரத் தலைவர் திருப்பதி, மாணவரணி தலைவர் பொன்ராஜ், ஜெபமாலை, பாமக சார்பில் ராஜா, தொம்மைராஜ், சுரேஷ் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here