நாசரேத்,ஜன.03:ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் பதவியை அதி முகவிடம் இருந்து திமுக கைப்பற்றுகிறது.9-வதுவார்டில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த ஜனகர் ஒன்றியக்குழுத் தலைவராகிறார்.
தூத்துக்குடி மாவட்டம்,ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.இவற்றில் 9 வார்டுகளை திமுகவும், 2 வார்டுகளை அதிமுகவும், ஒரு வார்டை காங்கிரஸ் கட்சியும், சுயேட்சை உறுப்பினர்கள் 3 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்கள் விபரம் பின்வருமாறு:-
1-வது வார்டு-ராஜாத்தி (திமுக), 2-வது வார்டு-மல்லிகா (அதிமுக), 3-வது வார்டு- பரமேஸ்வரி (திமுக), 4-வது வார்டு-ராஜகுமார் (அதிமுக), 5-வது வார்டு- ரகுராமன் (திமுக),6-வது வார்டு-மாhpமுத்து (திமுக),7-வது வார்டு-தாமஸ் (திமுக),8-வது வார்டு- நசரேயன் (சுயே),9-வது வார்டு-ஜனகர் (திமுக),10-வது வார்டு-ஜெயா (திமுக),11-வது வார்டு பியூலா ரத்தினம் (காங்),12-வது வார்டு-ஜெயகிருபா (திமுக),13-வது வார்டு-பு+ல் (சுயே),14-வது வார்டு-சசிதா (திமுக), 15-வது வார்டு-காந்திமதி (சுயே).
இதில் 9-வது வார்டில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த ஜனகர் ஒன்றியக்குழுத் தலைவர் வேட்பாளர் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவால் பரிந்ந்துரைக்கப்பட்டவர். எனவே அவர் ஒன்றியக்குழுத் தலைவர் ஆவதில் சந்தேகம் இல்லை. துணைத்தலைவராக திமுகவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியதிமுக செயலாளர் நவீன்குமாரால் தூத்துக்குடி மாவட்ட திமுகவிற்கு அடையாளம் காட்டக்கூடிய நபர் வருவதற்கு அதிகவாய்ப்பு உள்ளதாக திமுகவினர் மத்தியில் பேசிக்கொள்கின்றனர்.