விளாத்திக்குளம் தொகுதியை வளமான பூமியாக மாற்றுவேன் – சமக வேட்பாளர் எம்.எக்ஸ்.வில்சன் வாக்குறுதி

0
28
samaka

தூத்துக்குடி, ஏப்.3:

விளாத்திக்குளம் தொகுதியை வளமான பூமியாக மாற்றிட உங்களில் ஒருவனான எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று சமக வேட்பாளர் எம்.எக்ஸ்.வில்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், இந்திய ஜனநாயக கட்சிகளின் கூட்டணி சார்பில் அக்கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் எம்.எக்ஸ்.வில்சன் போட்டியிடுகிறார்.

வேட்பாளர் வில்சன் தமது கூட்டணி கட்சியினருடன் தொகுதி மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இதன்படி, அவர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது, சமக வேட்பாளர் வில்சன் கூறியதாவது, ’’நான் வெற்றி பெற்றவுடன் தொகுதி மக்களின் குறைகளை எல்லாம் கேட்டறிந்து அவை அனைத்தையும் உடனடியாக பூர்த்தி செய்து தருவேன். இதுபோன்று தொகுதியிலுள்ள பனைத்தொழிலாளர்கள், மீனவ மக்கள் நலம்பெறும் வகையில் அவர்களுக்கான திட்டங்களை எல்லாம் துரிதமாக நிறைவேற்றித்தருவேன்.

விளாத்திக்குளம் தொகுதியில் விளைவிக்கப்படும் வத்தலுக்கு உரிய கிடைத்திடவும், அவற்றை சேமித்து வைத்திடவும் குடோன்களை கட்டித்தந்திடுவேன். தொகுதியிலுள்ள அனைத்து நீர்நிலைகளையும் துரிதமாக தூர் வாரி மழைநீர் வீணாகாமல் சேமித்து விவசாயம் சிறந்திட உரிய முயற்சிகளை செய்திடுவேன். வறட்சி பூமியான விளாத்திக்குளம் தொகுதியை வளமான தொகுதியாக மாற்றி தந்திடுவேன்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here