”அனைவருக்கும் அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க செய்வேன்” – ஸ்ரீவை காங் வேட்பாளர் ஊர்வசி அமிரதராஜ் வாக்குறுதி

0
74
oorvasai Amirtharaj

ஸ்ரீவைகுண்டம்,ஏப்ரல்.03:

ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்கள் அனைவருக்கும் அனைத்து வகையான நலத்திட்டங்களும் கிடைக்க செய்வேன் என்று ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிரதராஜ் வாக்குறுதி அளித்து வருகிறார்.

ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடுகிறார். இவரது தந்தை ஊர்வசி செல்வராஜ் இத்தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்து பணியாற்றி தொகுதி மக்களின் அன்பை பெற்றிருந்தார். அவரது வழியில் தொகுதி மக்களுக்கு நன்மை செய்வேன் என்று கூறி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ஊர்வசி அமிர்தராஜ்.

திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஊர்வசி அமிர்தராஜ் பிரச்சாரத்தின் இடையில் கூறியதாவது :

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கபடுகிறதே தவிர எதுவும் முழுமையாக நிறைவேற்றபடவில்லை. தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக நான் போட்டியிடும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நல்ல சாலை வசதிகள் இல்லை. எங்கு சென்றாலும் ரோடுகள் குண்டும் குழியுமாக கிடக்கிறது. பொது மக்களுக்கு நல்ல குடி தண்ணீர் வசதி கிடையாது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விவசாயமே மக்களின் பிரதான தொழிலாகும்.

பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைக்கட்டுகளின் நீர் ஆதாரத்தை வைத்து இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு போதுமான அளவு உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஆண்டு முழுவதும் தேவையான அளவு தண்ணீர் தட்டுபாடில்லாமல் உரம், விளைவித்த பொருட்களுக்கு நல்ல விலை உள்ளிட்டவைகளை வழங்க இந்த ஆட்சியில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதனால் இங்கு விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் படிப்படியாக விவசாயத்தை விட்டு விட்டு வேறு தொழிலை தேடி நகர்புறத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். நான் ஒட்டு கேட்டு செல்லும் இடமெல்லாம் நல்ல குடி தண்ணீர் வழக்க வேண்டும் என்றே பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

எனது தந்தை ஊர்வசி செல்வராஜ் கடந்த 2006ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது காலத்தில் ஸ்ரீவைகுண்டம் பாலம், கிராம பஞ்சாயத்துகளில் சமுதாய நலக் கூடங்கள், சாலைகள் இல்லாத ஊர்களுக்கு சாலை வசிதி, பஸ் இல்லாத ஊர்களுக்கு பஸ் வசதி, நிலத்தடி நீரை பாதுகாக்க ஆற்றின் குறுக்கே பல்வேறு தடுப்பணைகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விழங்கும் மாணவர்களுக்கு சொந்த செலவில் ஊக்க தொகை மற்றும் மக்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் ஆகியவற்றை செய்து தந்தார்.

அவர் செய்து வந்த கட்சி பணி மற்றும் நலத்திட்டங்களை தொடர்ந்து 11ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறேன். இதை தொடந்து காங்கிரஸ் மேலிடம் எனக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கி வாய்பளித்துள்ளனர். தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைவது நிச்சயம். கடந்த 10 ஆண்டுளாக ஏமாற்றத்தை சந்தித்து வந்த தமிழக மக்களுக்கு அவர் நல்லாட்சி தருவார்.

நான் எனது தந்தையின் வழியில் நடந்து ஸ்ரீவைகுண்டம் தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றுவேன். அனைத்து கிராமங்களுக்கும் நல்ல குடிதண்ணீர் வசதி, தரமான சாலை வசதி, விவசாயத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தையும் தரம் உயர்த்தி பொது மக்களுக்கு தரமான மருத்துவ வசதி, தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க செய்தல், மணல் மேடாக காட்சியளிக்கும் குளங்கள் அனைத்தையும் தூரி வாரி விவசாயத்திற்கு ஆண்டு முழுவதும் பாசனத்திற் தேவையான தண்ணீர் வசதி, வாழை மற்றும் முருங்கை விவசாயிகள் கூடுதலா பயனடைய குளிர் சாதன வசதியுடன் கூடிய சேமிப்பு கிடங்குகள் கட்டுதல்,

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் பொறியியல் கல்வி திட்டத்தின் கீழ் வருடம்தோறும் 25 மாணவர்களுக்கு சொந்த செலவில் பொறியியல் கல்வி படிக்க வைப்பேன். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்படும். கருமேனி ஆறு, கால்வாய்கள் தூர்வாரப்பட்டு அனைத்து குளங்களிலும் நிரந்தரமாக நீர்நிரம்ப செய்வேன். சடையநேரி கால்வாய் மூலம் தாமிரபரணி ஆற்றுத்தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வேன்.

மீனவ கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்து மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க தூண்டில் விளைவுகளை ஏற்படுத்துவேன். மானியவிலையில் மீன்பிடி வலைகள், படகுகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சிப்காட் தொழிற்பேட்டை புதுப்பித்து புதிய தொழிற்சாலைகள் உருவாக்கி தொழில் வளம் மற்றும் வேலைவாய்ப்பினை இருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வேலைவாய்ப்பினை பெற்றுத்தர எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

சாத்தான்குளம் பிடாநேரியில் ஆரம்பிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள தொழிற்பேட்டையை ஆரம்பித்து அதிக அளவில் அங்கு தொழிற்சாலைகளை கொண்டு வந்து அப் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குதல், அனைத்து நிறுவனங்களும் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல், மகளிருக்கு சுயதொழில் மையம் ஏற்படுத்தி அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல்,

இளைஞர்கள் உடல் திறனை மேம்படுத்த உடற்பயிற்சி மையம், உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான நலத்திட்டங்களையும், அடிப்படை வசதிகள் அனைத்தையும் செயல்படுத்துவேன். அனைத்து அரசு திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதிய வழித்தடங்களில் புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பேன். ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்களுக்கு கமிஷன், கரப்ஷன், ஊழல் இல்லாமல் மக்களுக்கு பணி செய்வேன் என உறுதியளிக்கிறேன்’’ என்றார் ஊர்வசி அமிர்தராஜ்

தந்தை வழியில் மகன் கல்வி சேவை !

ஊர்வசி செல்வராஜ் கடந்த 2006ம் ஆண்டு வெற்றி பெற்ற பின் மாணவர்களின் கல்விக்கு பெரும் முக்கியதுவம் அளித்தார். குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ப்ளஸ் 2 அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மேல் படிப்பை தொடர முடியால் இருந்த ஏழை எளிய மாணவர்கள் 10பேரை தேர்வு செய்து அவர்களை சென்னையில் உள்ள தனது கிங்ஸ் இன்ஞினியரிங்க் கல்லூரியில் படிப்பு, தங்கும்மிடம், உணவு ஆகிய அனைத்தையும் இலவசமாக வழங்கி அவர்களை இன்ஞினியரிங் கல்வி அளித்தார்.

மேலும், பல மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தனது கல்லூரியில் இடம் அளித்து வந்தார். மேலும் சாயர்புரம் ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் இலவச கம்ப்யூட்டர் கல்வி மையம் அமைத்து மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி அளித்தார். அவரது மறைவிற்கு பின் அவரது மகனும் தற்போது ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான ஊர்வசி அமிர்தராஜ் தந்தை விட்டு சென்ற அனைத்து நலத்திட்டங்களையும் இன்று வரை நிறைவேற்றி வருகிறார்.

தற்போது இவர வரும் ஆண்டில் இருந்து 25 மாணவர்களுக்கு முற்றிலும் இலவச கல்வி அளிக்க போவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் தொகுதியில் இலவசமாக ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கவும் ஏற்பாடு செய்துவருகிறார் என்பது குறிப்பிட தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here