ஆலந்தலை திருஇருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி

0
62
aalanthalai news

திருச்செந்தூர், ஜன. 3

திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் திருஇருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் தலை வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்வத மக்கள் பங்கேற்றனர்.

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை திருஇருதய அற்புதக் கெபி திருத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு புத்தாண்டின் தலை வெள்ளியான நேற்று சிறப்பு திருப்பலி நடந்தத. இதையொட்டி பகல் 12 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன்அந்தோணி பங்கு இல்லத்திற்கு வந்தார். அங்கிருந்து அவரை பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்று கெபிக்கு அழைத்து சென்றனர்.

தொடர்ந்து நடந்த சிறப்பு நவநாள் வழி பாட்டுக்கு ஆயர் தலைமையேற்று மறையுரையாற்றினார். இதில் வட்டார முதன்மை குரு பன்னீர்செல்வம், பங்குதந்தைகள் குமார்ராஜா, ஜேம்ஸ்பீட்டர், பங்கிராஸ், லியோஜெயசீலன், கூடுதாழை வில்லியம், உவரி வில்லியம், ஜெகதீஸ், செல்வன், பிரான்சிஸ், சந்தீஸ்டன், கிராசியுஸ்மைக்கிள், ரூபன், வளன், அற்புதசேவியர், ஜெயஜோதி, பிரைட்மச்சாடோ, வில்பிரட், அத்தனாசியுஸ்ஜோ, பிளேவியன், சார்லஸ், லாசர்சூசை, ஆல்வின்,சேவியர், தினேஷ், ததேயுஸ்ராஜன், ஜெபாஸ்டின், ஜெயகுமார், ஷாஜிஜோசப், மற்றும் ரினோ மற்றும் சென்னை, கோவை, திருச்சி, பெங்களூர், புதுச்சேரி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அனைவருக்கும் அசன உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை ஜெயக்குமார், துணை பங்குதந்தைகள் ஷாஜிஜோசப், ரினோ, அருட்சகோதரிகள், பக்தசபையினர், ஊர்நலக்கமிட்டி மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here