வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ,சித்த மருத்துவ பிரிவு சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

0
24
vallanadu

வல்லநாடு,ஏப்.10:

வல்லநாடு பேருந்து நிலையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ,சித்த மருத்துவ பிரிவு சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அதிகரிக்கும் கொரானா வைரஸை தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் பேருந்து நிலையம் ,புகைவண்டி நிலையம், விமான நிலையம், பள்ளிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நிலவேம்பு குடிநீர் ,கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது, அதன் ஒரு பகுதியாக வல்லநாடு பேருந்து நிலையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் செல்வகுமார் வரவேற்புரை நிகழ்த்தி கபசுர குடிநீர் முக்கியத்துவம் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும் உணவுகள் ஆகியன பற்றி எடுத்துரைத்தார், வல்லநாடு கஸ்பா பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன், முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர்,

ஐந்தாம் வார்டு ஒன்றியக் கவுன்சிலர் முத்துராமலிங்கம், பஞ்சாயத்து துணைத்தலைவர் சுப்புலட்சுமி ராமசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், சமூக ஆர்வலர் நங்கமுத்து, தங்கம் ஓட்டல் பரமசிவம், பேபிஸ்டுடியோ மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர் சமூக ஆர்வலர் தங்கராஜ் நன்றி கூறினார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருமலை டெக்கரேஷன் முத்துவேல் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் வேம்பன் மகேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர், வல்லநாடு மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் சுமார் ஆயிரம் பேர் பயன்பெற்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here