தருவைகுளத்தில் காமராஜர் வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர் சங்கம் துவக்க விழா

0
68
tharuvaikulam

தூத்துக்குடி,ஏப்.12:

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா தருவைகுளத்தில் பெருந்தலைவர் காமராஜர் வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர் சங்கம் துவக்க விழா நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தருவைக்குளம் பங்குத்தந்தை எட்வா்ட் ஜே தமிழக வாடகை வாகன ஓட்டுநர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் திருநெல்வேலி சந்தோசம், தருவைகுளம் காவல்துறை உதவி ஆய்வாளர் சரவணன், கவுன்சிலர் ஆலோசனை மரியான், ஊர் கட்டளைக்காரா் மகாராஜா, துணை பஞ்சாயத்து தலைவர் புதுமைச்சாமி. நிக்கோலாஸ், நாட்டுப்படகு சங்க தலைவர் ஜெயபால், நாட்டுப்படகு சங்கத் தலைவர் விஜய், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பிரான்சிஸ், மோசஸ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். பொருளாளர் ஆல்பர்ட் அனைவரையும் வரவேற்று பேசினார். பெருந்தலைவர் காமராஜர் வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் சங்கம் பதாகையை பங்குத்தந்தை திறந்து வைத்து, அடையாள அட்டை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெருந்தலைவர் காமராஜர் வாகன உரிமையாளர்கள் ஓட்டுனர் சங்க தலைவர் பொன்சிங் மற்றும் துணைத்தலைவர் வில்சன், செயலாளர் ஜேசுராஜா,துணை செயலாளர் நிக்கோலஸ், பொருளாளர் ஆல்பா்ட் மற்றும் நிர்வாகிகள் சேகர், மணி நேரு உட்பட நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here