விரும்பும் மாநிலத்தில் 10 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய ஆலை – ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நிர்வாகம் முடிவு !

0
76
sterlite news

தூத்துக்குடி,ஏப்.16:

10 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய ஆலை தொடங்க ஸ்டெர்லைட் காப்பர் ஆலை முடிவு செய்துள்ளது. அதில் பங்கேற்க விருமும் மாநில அரசுகளுக்கு ஆலை நிர்வாகம் அழைப்பு விடுத்திருக்கிறது.

ஒரு காலத்தில் தென் தமிழகம் அடிக்கடி சாதி சண்டைகள் நடக்க கூடியதாக இருந்தது. அது குறித்து விசாரணை செய்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு, புதிய தொழிற்சாலைகளை தொடங்கி வேலை வாய்ப்புகளை உருவாக்கினால்தான் சாதி சண்டைகளை நிறுத்த முடியும் என்று அறிக்கை தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களும் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகளும் தொழிற்சாலைகள் வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

இந்தநிலையில்தான் தூத்துக்குடிக்கு ஸ்டெலைட் காப்பர் ஆலை கொண்டுவரப்பட்டது. அந்த ஆலை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட காப்பர் அளவு, நமது தேவைபோக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இருந்தது. தூத்துக்குடி மக்களின் பொருளாதார வளர்ச்சியிலும் இந்த ஆலைக்கு பங்கிருந்தது.

இதற்கிடையே தூத்துக்குடி மாசுபடுகிறது. அதற்கு ஸ்டெர்லைட் ஆலைதான் காரணம் என குற்றசாட்டு எழுந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவ்வாலைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. போலீஸுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற தள்ளுமுள்ளுவில் 13 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்த கொதிப்பை அடக்கும் விதமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிடுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 2018லிருந்து தற்போது வரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கிறது. ஆலை நிர்வாகமும் ஆலையை மீண்டும் திறப்பதற்கு சட்ட ரீதியாக போராடி வருகிறது. தமிழக அரசுக்கு எதிரானவர்களின் அச்சுறுத்தல், ஆலைக்கு எதிராக அரசை செயல்பட தூண்டுகிறது. அதனால் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆலைக்கு எதிராக வாதம் செய்து வருகிறது தமிழக அரசு.

இந்தநிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குமா? அல்லது நிரந்தரமாக மூடப்படுமா என்கிற கேள்வி ஏகமும் கேட்கபட்டு வருகிறது. இதற்கிடையேதான் அப்படியொரு அறிவிப்பை அறிவித்திருக்கிறது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்.

புதிதாக 10 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய ஆலையை தொடங்க இருக்கிறோம். இதனை ஏற்கும் மாநில அரசுகள் அழைக்கபடுகிறார்கள் என்று சமீபத்தில் விளம்பரம் கொடுத்திருக்கிறது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்.

இந்த அறிவிப்பை பார்த்ததும் அதிர்ந்து போயிருக்கிறார்கள் தூத்துக்குடி தொழில் அதிபர்கள் பலர். துறைமுகம், அது சார்ந்த போக்குவரத்து தொழில் செய்து வந்தவர்கள் ஸ்டெர்லைட் ஆலை மூடிய பிறகு தொழிலற்று காணப்படுகிறார்கள். ’அரசியல் காரணங்களுக்காக தூண்டிவிடுவோரின் சதி தெரியாமல் அப்பாவி மக்கள் போராடி ஆலையை மூடிவிட்டார்கள்’ என்று வருத்தம் தெரிவிக்கும் தொழிலதிபர்கள், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று விரும்பினாலும் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.

புதிய தொழிற்சாலை குறித்த அறிவிப்பில், 5 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு கையாளும் திறன் கொண்டது, முழுக்க முழுக்க அந்த ஆலை நவீன தொழில்நுட்பத்துடன வடிவமைக்கப்படும். அதற்காக 1000 ஏக்கர் நிலம் தேவை, துறைமுகம், லாரி உள்ளிட்ட போக்குவரத்து வசதி தேவை, இந்த வசதிகளை ஏற்படுத்தி தரும் மாநிலத்தில் அந்த தொழிற்சாலை நிறுவப்படும். அந்த மாநிலத்திற்கு ஆண்டுதோறு 3 ஆயிரம் கோடி அளவில் வருவாய் கிடைக்கும். சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்ற கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த மத்திய சுரங்கத்துறை அமைச்சர், ’’தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்கியபோது இந்தியாவில் காப்பர் உள்பத்தி அளவு 8.3 லட்சம் டன் அளவில் இருந்தது. அதன்படி 2017 -18 ம் ஆண்டு நமது தேவைக்கு போக மீதி 3 லட்சத்து 78 ஆயிரம் டன் காப்பரை ஏற்றுமதி செய்தோம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2018ல் மூடப்பட்டது.

அதன் பிறகு 2018 – 2019 ம் ஆண்டைய ஏற்றுமதி கணக்கில் 47,917 டன் காப்பர் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன் பிறகு 2019 -2020 ம் ஆண்டைய கணக்குபடி வெறும் 36,959 டன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது. 2019 – 2020 ஆண்டைய கணக்குப்படி இந்தியாவில் காப்பர் உற்பத்தியின் அளவு வெறும் 4.1 லட்சம் டன் என்கிற நிலைக்கு குறைந்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி 90 சதவீதம் காப்பர் ஏற்றுமதி இல்லை.

2017 – 2018 ம் ஆண்டின் கணக்குப்படி 44,245 டன் அளவிற்கு மட்டுமே காப்பர் இறக்குமதி செய்யப்பட்டது. அது 2018 – 2019 ம் ஆண்டின் கணக்குப்படி 92,990 டன் அளவிற்கு அதிகரித்தது. 2019 – 2020 ஆண்டு கணக்கின் படி 1,52,000 டன் காப்பர் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. ஆக மூன்று மடங்கு அளவிற்கு காப்பர் தேவை இருக்கிறது’’ என்றார்.

எனவே நமது நாட்டின் காப்பர் தேவையை பூர்த்தி செய்ய புதிய யுக்திகளை கையாண்டுதான் ஆக வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. காப்பர் உற்பத்தி ஆலையை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில்தான் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் 10 ஆயிரம் கோடியில் புதிய ஆலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு இடம் கொடுக்க இந்தியாவில் எந்த மாநிலம் முன்வருகிறதோ அந்த மாநிலத்தில் சுயசார்பு திட்டத்தின் கீழ் தொடங்குவதற்கு தயாராகி வருகிறது. அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

தூத்துக்குடி ஆலை குறித்து, ’சட்டப்படியான முன்னெடுத்தலில் நல்ல தீர்வு கிடைக்கும் என தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்’ என்கிறது ஆலை நிர்வாகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here