சாத்தான்குளம் அருகே காட்டுக்குள்ளிருந்து காயத்துடன் வெளியில் வந்த புள்ளிமான் மீட்பு

0
26
maan news

சாத்தான்குளம், ஏப். 16:

சாத்தான்குளம் அருகே காட்டுப்பகுதியிலிருந்து வெளியேறி காயத்துடன் தோட்டத்தில் தஞ்சம் அடைந்த புள்ளிமான், வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

சாத்தான்குளம் அருகே மேலநடுவக்குறிச்சியில் தவசிலிங்கம் என்பவருக்கு சொந்த மான தோட்டம் இருக்கிறது. காட்டுப்பகுதியிலிருந்து வெளியேறி காயத்துடன் வந்த புள்ளிமான் ஒன்று தோட்டத்தில் புகுந்தது. அதன் கொம்பில் காயம் இருந்தது. இதை கவனித்த அப்பகுதி மக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

திருச்செந்தூர் வனத்துறை உதவி ஆய்வாளர் சுப்புராஜ் தலைமையில் வனத்துறை காவலர்கள் 4பேர் வந்து புள்ளிமானை மீட்டு காயத்துக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் வனப்பகுதியில் கொண்டு விட நடவடிக்கை எடுத்தனர். களக்காடு அல்லது வல்லநாடு பகுதியில் இருந்து புள்ளிமான் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இப்பகுதியில் வந்தபோது நாய்கள் துரத்தியதால் தோட்டத்தில் தஞ்சம் புகுந்திருக்கலாம் என கருதுகிறார்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here