ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்-ற்கு தீவிர சிகிச்சை

0
16
vivek

சென்னை

நகைச்சுவை நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நகைச்சுவை நடிகர் விவேக், பொதுக்காரியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்வதை பார்க்க முடியும்.

அப்படிபட்ட பொதுநலவாதியான நடிகர் விவேக் நேற்று கொரோனாவுக்கான தடுப்பூசியை போட்டுக் கொண்டார். அது குறித்து பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் பேசவும் செய்தார்.

இந்தநிலையில் இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விவேக் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “நடிகர் விவேக், இன்று காலை 11 மணிக்கு சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டதால் அவருக்கு இப்படி நடக்கவில்லை. அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை’’ இவ்வாறுஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here