சத்குருவின் கோவில் அடிமை நிறுத்து திட்டம் – அச்சத்தில் அந்நிய சக்திகள்

0
16
isha

நமது நாட்டில் எது நடந்தாலும் அதில் அந்நிய சக்திகளின் குறுக்கீடு இல்லாமல் இல்லை. அதிலும் ஆன்மிக விசயத்தில் அது ஏராளம்.

கடந்த காலங்களில் இந்தியாவின் பூர்விக ஆன்மிகம் பல்வேறு அந்நிய சக்திகளால் அசைத்து பார்க்கப்பட்டது என்பது தெரிந்த விசயம்தான். அது சாதாரண வேராக இருந்தால் அந்நியசக்திகளால் அது எளிதில் அறுக்கப்பட்டிருக்கும். இது அத்தனைக்கும் மேலான அதி சக்தி வாய்ந்தது என்பதால் இதனை யாராலும் ஒன்றுமே செய்யமுடியவில்லை அறுக்க அறுக்க வளர்ந்து கொண்டே இருக்கிறது. அருள், ஞானம், கர்மம் என்கிற ஆன்மிக வழியில் எப்போதுமே வெற்றி நடைபோடுகிறது நம் மண்ணின் ஆன்மிகம்.

அதி சக்தி வாய்ந்த ஆன்மிகம் அறநிலையத்துறையின் கீழ் இருந்து வருகிறது. அறநிலையத்துறை மூலம் நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்தினாலும் அதனால் ஆன்மிகம் வளர்ச்சி பெற்றதாக தெரியவில்லை. மாறாக இழப்புதான் ஏற்பட்டு வருகிறது என கருதுகிறார்கள் ஆன்மிக பெரியவர்கள். ஆயிரக்கணக்கான கோவில்களில் பூஜைகள் நடத்தப்படாமல் உடைந்து போய் கிடக்கிறது என்கிறார்கள். எனவேதான் அறநிலையத்துறைக்குள் நமது கோவில்கள் இருக்க வேண்டாம் என்கிறார்கள்.

ஈஷா யோகா நிறுவனர் சத்குருவும் அதையே சொல்கிறார். அதோடு நில்லாமல் கோயில் அடிமை நிறுத்து என்று ஒரு இயக்கத்தையும் உருவாக்கிவிட்டார். அதற்கு 3 கோடி பேர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இதனால் அடுத்து வரக்கூடிய தமிழக அரசு இதை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற மத வழிபாடுகள் சுதந்திரமாக செயல்படுவதுபோல் இந்து மத கோவில்களும் இந்து மதத்தவர்களாலே வழிநடத்தும் நிலை வரப்போகிறது. அப்படி வரும் பட்சத்தில் எங்கெல்லாம் கோவில்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்து மத குருக்கள் சென்று கண்காணிப்பார்கள். அப்போது அனைத்து கோவில்களிலும் பூஜைகள் நடைபெறும், அனைத்து கோவில்களும் வெளிச்சம் பெறும். இந்து மத வழிபாடுகளையும், அதன் அர்த்தங்களையும் குருமார்கள் பக்தர்களுக்கு விவரிப்பார்கள். அதன் மூலம் விபரம் பெறும் பக்தர்களுக்கு அடுத்த மதத்திற்கு போகவேண்டிய நிலை வராது.

நிலமை இப்படி இருக்க, சிலர் இந்த திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சத்குரு மீது ஏதேதோ புகார்களை சொல்லி அமுக்க பார்க்கிறார்கள். தமிழகத்தில் இந்து ஆன்மிகம் மிளிரப்போகிறது என்பதை எதிர்பார்த்து சந்தோஷப்படாமல் அதற்கு பதிலாக எதிர்ப்பு கொடுத்து கதறுகிறார்கள். இவர்களில் பலர் அந்நிய ஆன்மிகத்துக்கு ஆதரவானவர்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக சொல்லும் ஆன்மிகவாதிகள் சிலர், சத்குருவின் கோவில் அடிமை நிறுத்து திட்டத்தை பார்த்து அந்நிய சக்திகள் அச்சம் கொள்கிறது என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here