கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடத்த உத்தரவிட முடியாது உயர்நீதிமன்றம் உத்தரவு..

0
133
kalalagar

மதுரை,ஏப்.19:

மதுரை சேர்ந்த அருண் போத்திராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,” மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும்.

இந்த ஆண்டு கொரோனா நோய்தொற்றை காரணம் காட்டி திருவிழாக்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பெரும்பாலானவர்கள் ஏமாற்றமடைவார்கள். குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுடன் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்த அனுமதித்து உத்தரவிட வேண்டும் ” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு, கொரோனா தொற்று மிகத்தீவிரமாக பரவி வரும் சூழலில் இது எவ்வாறு சாத்தியம்? வைகை ஆற்றில் தண்ணீரே இல்லை. வெறும் குப்பைகளே நிறைந்துள்ளன என தெரிவித்தனர்.

மனுதாரர் தரப்பில், ” பக்தர்களே கலந்து கொள்ளாமல் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை நடத்த வேண்டும். அதனை ஊடகங்களில் ஒளிபரப்ப உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,

“மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது. கொரோனா பரவல் மிகத்தீவிரமாக பரவி வரும் வரும் சூழலில், கட்டுப்பாடுகள் மேலும் அதிகப்படுத்தப்படலாம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி வழங்க இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here