ஊரடங்கு போடவில்லை என்றால் கொரோனாவோடு போராட்டம்.. ஊரடங்கு போட்டால் வாழ்வாதாரத்துக்காக போராட்டம்..

0
45
news

கடந்த ஆண்டு உலகையே அச்சுறுத்த தொடங்கிய கொரோவின் பசி இன்னும் தீர்ந்தபாடில்லை. கடந்த ஆண்டு இதே வேளையில் சீனாவில் தோன்றிய கொரோனா என்கிற இந்த வைரஸ், உலகையே ஆட்டிப்படைத்தது. ஒரு ஆண்டு காலமாக வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி மக்கள் தவித்து வருகிறார்கள்.

அந்தஸ்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் கூட பின் தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது. மோசமான சூழ்நிலையிலும் மக்களை பாதுகாப்பதற்காக மத்திய மாநில அரசுகள் போராடி வருகின்றன என்பதையும் பார்க்கிறோம்.

இடையில் கொஞ்சம் நாட்கள் வேகத்தை குறைத்திருந்த கொரோனா, தற்போது இரண்டாவது சுற்றில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுதான் இப்போதைய அதிர்ச்சித் தகவலாகும்.

நிலமையை சீராக்க நாளை முதல் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்க போகிறது தமிழக அரசு. இந்தநிலையில் பல்வேறு தரப்பினரும் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக போவதை நினைத்து அச்சத்தில் உறைந்து நிற்கிறார்கள். பல்வேறு கலை அமைப்பினரும், அரசினடம் கோரிக்கை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

குறைந்தபட்சமாவது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வாய்ப்பு கொடுத்து வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுங்கள் என்கிறார்கள். அந்த வரிசையில் ஒலி – ஒளி அமைப்பாளர்கள் சங்கத்தலைவர் மணி தலைமையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். அந்த மனுவில், ’’கடந்த ஆண்டு ஆறுமாத காலமாக எந்தவிதமான விழாக்களும் நடத்தப்படாத நிலையில் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இத்தகையசூழ்நிலையில், மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும்பொருட்டு சினிமா தியேட்டர்களுக்கு 50சதவீத அனுமதி அளிப்பது போன்று திருமணம் மற்றும் திருவிழாக்களை நடத்துவதற்கும் 50சதவீத அனுமதி கொடுத்து எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவேண்டும்’’ என்று அதில் கூறியுள்ளனர்.

இதேபோன்று பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக கோரிக்கை வைத்து வருகிறார்கள். மக்கள் அனைவரின் வாழ்வாதாரத்திற்கு வழி தேடுவது அரசின் கடமைதான். அதுபோல் மக்கள் அனைவரின் உயிர் காப்பதும் அரசின் கடமையே. எனவே அரசிடம் கோரிக்கை வைக்கும் மக்கள், அரசின் வேண்டுகோளையும் ஏற்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here