சூர்யா பிரச்னையை சுற்றுகிறாரா … பிரச்னை சூர்யாவை சுற்றுகிறதா… இதில் எது முதலில் ?

0
61
suriya

சமீபகாலமாக நடிகர் சூர்யா, புதிய கல்வி கொள்கைக்கு எதிராக வாய்ஸ் கொடுப்பதும் ஆளும் கட்சி தரப்பிலிருந்து அவருக்கு எதிராக பதில் கொடுப்பதுமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் கிராம சபை மூலம் கல்வி கொள்கை குறித்த குறைகளை மக்களிடம் எடுத்து செல்ல சூர்யா திட்டமிட்டிருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. இதன் மூலம் புதிய கல்வி கொள்கையை கடுமையாக எதிர்க்கும் முடிவில் அவர் இருப்பதாக தெரிகிறது.

சூர்யா உள்ளிட்ட அவரை சார்ந்தவர்களும் அவர் கருத்தை ஆதரித்து வருகிறார்கள். சூர்யாவை பொறுத்தவரை ’அகரம் பவுண்டேஷன்’ என்கிற பெயரில் அரக்கட்டளை வைத்து தொண்டு செய்து வருகிறார் என்று பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் இந்த அளவிற்கு அரசை எதிர்த்து பேசியது இதுவரை கிடையாது.

எனவே அவரின் இத்தகைய சூழ்நிலைக்கு வேறு எதுவும் காரணம் இருக்குமோ? என்று பலரும் பலவிதமாக கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே சூர்யாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஏகபட்ட செய்திகள் உலா வருகிறது. தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, அவருக்கு எதிராகவும் அதே வலைதளங்களில் கருத்து பரவி வருகிறது.

‘’மத்தியரசு கிட்டதட்ட ஒரு லட்சம் என்.ஜி.ஓக்களை தடை செய்த பிறகு சில மாதங்கள் நாடு முழுவதும் ஒப்பாரிகளும், ஓலங்களும் சகிப்பு தன்மையின்மை என்கிற கூக்குரல்களும் நிறைந்து காணப்பட்டது…!

மிஷனரிகளின் மதமாற்ற செயல்பாடுகளும் ஸ்தம்பித்தது..! ஆனால் பலமாதங்கள் கழித்து இந்த பேச்சுக்களும் ஒப்பாரிகளும் அப்படியே அமுங்கி போனது..

மதமாற்ற மிஷனரிகளின் செயல்பாடுகளும் மீண்டும் பழையபடியே ஆரம்பித்தது…! அதற்கு காரணம் மிஷனரிகள் கண்டுபிடித்த மாற்று வழிகள்தான். இதேபோன்று ….சில பவுண்டேசன்கள், என்.ஜி.ஓக்கள் செய்து கொண்டிருந்த வேலையை இந்த பவுண்டேசன் மூலமாக மிஷனரிகள் கன கச்சிதமாக ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் எந்த ஆர்ப்பாட்டமும் அரவமும் இன்றி கோடம்பாக்கம் கோடீஸ்வரமாபியாக்களின் ட்ரில்லியன் கள்ள பணங்களும் தென் இந்தியா பணமுதலைகளுடையவும், அரசியல்வாதிகளுடையவும் ட்ரில்லியன் டாலர் கள்ள பணங்களும் இந்த தகரம் பவுண்டேசன் மூலம் கைமாற துவங்கியது..!

ஆரம்பம் இருந்தால் முடிவு வேண்டும் அல்லவா..? ட்ரில்லியன் டாலர்கள் வந்த அக்கவுண்ட்டிலிருந்த காசு என்ன காரணத்துக்கு யாருக்கு கொடுக்கப்பட்டது என்பதில்தான் பிரச்னையே..!

இதைத்தான் வருமான வரித்துறை கேட்கும்..! 1000 குழந்தைகளுக்கு துணிமணிகள், சாப்பாடுக்கு செலவு செய்தேன் என்று ஒரு 10 கோடியை சொல்லலாம்.. இல்லை 100 கோடியோ 1000 கோடியை சொல்லலாம்..!

லட்சம் கோடிகள் இருந்தால்..? அதை எப்படி செலவு காட்ட முடியும்..? ஆனால் கை காட்டிதானே ஆக வேண்டும். இல்லையென்றால் அதன் பலனை அனுபவிக்க வேண்டும்.

இவர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் நிலமை என்பது விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல்.. முழி பிதுங்கி உட்கார்ந்திருப்பதுதான்..! இன்னும் சில வாரங்களில் உண்மை வெளிச்சத்துக்கு வரும்..!’’ -இப்படியொரு வாசகம் வலை தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்தநிலையில்தான் அப்படியொரு கேள்வி எழுகிறது, ’புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பதால், சூரியா மீது இப்படியொரு புகார் பரப்பபடுகிறதா..அல்லது அப்படியொரு பிரச்னையில் சிக்கியிருப்பதால் சூர்யா உள்ளிட்டோர் கல்வி கொள்கையை எதிர்த்து அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறார்களா..?

அதாவது, ‘சூர்யா பிரச்னையை சுற்றுகிறாரா … பிரச்னை சூர்யாவை சுற்றுகிறதா…இதில் எது முதலில்..?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here