’’நாங்கள் பாரத மாதாவின் பிள்ளைகள் அல்ல’’ – சீமானின் பிரிவினை வாத பேச்சு

0
156
seeman news

நாங்கள் பாரத மாதாவின் பிள்ளைகள் அல்ல, பாரத மாதா கீ ஜே என சொல்ல முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னையில் நாம்தமிழர் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்தார் சீமான். பாரத் மாதா கீ ஜே என்பவர்களே இந்தியாவில் வாழ முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறாரே என சீமானிடம் கேட்கபட்டது அதற்கு அவர், ‘’நாங்கள் பாரத மாதாவின் பிள்ளைகள் அல்ல. தமிழ்தாயின் பிள்ளைகள் நாங்கள். எங்களால் பாரத் மாதா கீ ஜே என சொல்ல முடியாது. இந்த நிலம் நாடாவதற்கு முன்பே பன்னெடுங்காலமாக வாழ்கிறவர்கள் நாங்கள்.

பெருந்தேசிய இனமான தமிழ்த் தேசிய இனத்து பிள்ளைகள் நாங்கள். இந்தியா எங்கள் தேசமும் அல்ல. எங்கள் தேசம் தமிழ் தேசம். நாங்கள் இந்தியா என்கிற நாட்டின் குடிமக்கள். ஆங்கிலேயர்களால் ஒன்றிணைக்கப்பட்ட மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா. இது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதைத்தான் ராஜ்யசபாவில் ப.சிதம்பரமும் சுட்டிக்காட்டி பேசினார்.

பிரதேசங்களின் உரிமைகளை மதிக்காமல் செயல்பட்டால் உள்நாட்டு யுத்தத்தையே நீங்கள் சந்திக்க வேண்டும். அது தவிர்க்க முடியாதது. அதை நோக்கி மத்திய அரசு தள்ளிவிடாமல் இருப்பதுதான் தேச ஒற்றுமைக்கு நல்லது’’ இவ்வாறு சீமான் பேசினார்.

சீமானின் இத்தகைய பேச்சு தேசிய வாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ’’இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக பேசும் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களே. சீமானின் இத்தகைய பேச்சு இந்திய ஒருமைப்பாட்டுக்கு கேடு விளைவிப்பதாக இருக்கிறது. எனவே சீமான் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார்கள் தேசிய வாதிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here