ஆலையை திறந்து ஆக்ஸிஜனை உடனே உற்பத்தி செய்ய வேண்டும் – தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கோரிக்கை

0
12
sterlite news

தூத்துக்குடி,ஏப்.30:

தூத்துக்குடியில் சுமார் இருபது ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி ஆலை கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சுற்றுசூழலை காரணம் காட்டி நடத்தப்பட்ட போராட்டத்தால் மூடப்பட்டிருக்கிறது. ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என ஆலை நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்தநிலையில் நாடுமுழுவதும் இருந்து வரும் கொரோனா பாதிப்பிற்கு தேவைப்படும் ஆக்ஸிஜனை நாங்கள் தருகிறோம் என மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லை ஆலை நிர்வாகம் உச்சநீதி மன்றம் மூலம் கேட்டுக் கொண்டது. அதற்கு மத்தியரசு உடனே இசைந்தது. ஆனால் மாநில அரசோ ஆலைக்கு எதிரானவர்களின் எதிர்ப்பு கருத்தை கருத்தில் கொண்டு பின்வாங்கியது. பின்னர் ஆக்ஸிஜனின் அவசியம் குறித்து எழுந்த உந்துதலின் அடிப்படையில் எதிர்கட்சிகளின் சம்மதத்துடன் இசைந்தது. ஆனாலும் எதிர்ப்பாளர்கள் சிலர் அச்சுறுத்தி வந்த நிலையில் அவர்களில் சிலர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி ஆலையை திறந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய மாநில அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

இந்தநிலையில் ஆலை நிர்வாகம் உடனே ஆக்ஸினன் உற்பத்தியை தொடங்க வேண்டும். அதற்கு தேவையான ஏற்பாட்டை அரசு நிர்வாகம் மேற்கொள்ளவேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவையினர், இந்து வணிகர் சங்கத்தினர், இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் பண்டாரம்பட்டி ஊரை சேர்ந்தவர்கள், ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்ததாரர் சங்கத்தினர் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர்.

மிக அவசரமான இந்த கால கட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் தயாரிக்க அரசு நிர்வாகம் உதவ வேண்டும். அதற்கு இடையூறாக இருப்போர் மீது வழக்குபதிவு செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கருத்தினை வலியுறுத்தினர். தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகன் பேசும்போது, ’’ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும். இந்த ஆலையை நம்பி ஏராளமானோர் பிழைத்து வந்தனர். நாங்கள் அந்த ஆலைக்காக ஓட்டி வந்த லாரிகள் மூலம் பல தொழில்கள் நடந்து வந்தன. இப்போது அதெல்லாம் முடங்கி போய் கிடக்கிறது. எங்கள் லாரிகள் டீவ் கட்டமுடியாமல் கிடக்கிறது. ஆலையை நம்பிநடந்த தொழில் அத்தனையும் முடங்கிகிடக்கிறது. எனவே ஆலையை உடனே திறந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து ஆலையின் அனைத்தையும் இயக்கி எங்கள் அனைஅவரின் வாழ்வாதாரத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும்’’ என்றார்.

இதில் தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகன், மக்கள் நுகர்வோர்பாதுகாப்பு பேரவை செயலாளர் கல்லைசிந்தா, ஒப்பந்தகாரர் தியாகராஜன், இந்து வணிகர்கள் சங்க தலைவர் குணசீலன், இந்து மக்கள் கட்சி மாநிலசெயலாளர் வசந்தகுமார், பண்டாரம்பட்டி ஊரை சேர்ந்த சுமித்ரா உள்ளிட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here