சாத்தான்குளம் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை – பட்டை நாமம் அடித்து டிஎஸ்பி அலுவலகத்தில் மனு கொடுத்த தொழிலாளி

0
9
sathankulam police

சாத்தான்குளம்,ஏப்.30:

சாத்தான்குளம் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டித்து பட்டை நாமம் அடித்து கொண்ட தொழிலாளர் ஒருவர் டிஎஸ்பி அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

சாத்தான்குளம் அமுதுன்னாக்குடியைச் சேர்ந்தவர் அர்ஜூனைப் பாண்டி(65). தொழிலாளி இவரது வீட்டு அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்து சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்திருக்கிறார். அது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனராம். ஆனால் இதனை அறிந்த எதிர் தரப்பினர் ஆத்திரமடைந்து அர்ஜுனைப்பாண்டியனை தாக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அர்ஜுனைப்பாண்டியன், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இது குறித்து ஒருமாதமாக காவல் நிலையத்திற்கு சென்று வந்த அருஜூனைப்பாண்டியன் எந்த நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு அனுப்பினார். அந்த மனு விசாரணைக்காக சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்துக்கு அனுப்பினர். இதையடுத்து டிஎஸ்பி அலுவலகத்தில் விசாரணைக்கு இரு தரப்பினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

அதில அர்ஜூனைப்பாண்டி மட்டும் ஆஜராகினார். எதிர்தரப்பினர் ஆஜராகாமல் இருந்து வந்தனராம். இதனால் அவர் தொடர்ந்து காவல் நிலையம், டிஎஸ்பி அலுவலகம் வந்து அலைந்து கொண்டிருந்ததையடுத்து அர்ஜுனைபாண்டியன் அவர் மனு மீது உடன் நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரதம் இருக்க போவதாக மனு அனுப்பினாராம். ஆனாலும் அவர் புகார் மனு மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.

இதனால் விரக்தி அடைந்த அர்ஜூனைபாண்டி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து நெற்றியில் பட்டை நாமம் போட்டு சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகம் வந்து மீண்டும் மனு கொடுக்க முயன்றார். அப்போது அங்குள்ள அதிகாரிகள் தங்கள் மனு ஏற்கனவே விசாரணையில் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக¢கப்படும் என திருப்பி அனுப்பி வைத்தனர். அவர் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட உள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here