முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார்

0
16
cm

சென்னை: தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ள நிலையில், தனது முதல்வர் பதவியை பழனிசாமி ராஜினாமா செய்தார். சேலத்தில் இருந்தும் கடிதம் மூலமாக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 7ம் தேதி கவர்னர் மாளிகையில் எளிய முறையில் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி தோல்வி அடைந்ததால், தனது முதல்வர் பதவியை பழனிசாமி ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு சேலத்தில் இருந்து அனுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here