சபதத்தை நிறைவேற்றியுள்ளோம்: பா.ஜ., முருகன் பெருமிதம்

0
8
l.murugan

சென்னை: சட்டசபை தேர்தலில் 4 பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்றதையடுத்து, பா.ஜ., உறுப்பினர்கள் சட்டசபையை அலங்கரிப்பார்கள் என்று தான் கூறிய சபதத்தை நிறைவேற்றியுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம். தேர்தல் மூலம் கிடைக்கும் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் பா.ஜ., மக்களுக்காக உழைப்பதில் என்றும் பின் வாங்கியதில்லை. நான் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற போது தெரிவித்த கருத்துகளை மீண்டும் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். 2021ல் பா.ஜ., சட்டசபை உறுப்பினர்கள் சட்டசபையை அலங்கரிப்பார்கள் என்று சபதம் ஏற்றிருந்தோம். இன்று அது நிறைவேறி இருக்கிறது. 1996ல் ஒருவரும், 2001ல் நான்கு பேரும் எம்.எல்.ஏ.,வாக இருந்தார்கள். இப்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 4 உறுப்பினர்களை பா.ஜ., பெற்றிருக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்காக பிரசாரங்கள் மேற்கொண்ட பிரதமர் மோடி, பாஜ., தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டசபையில் கடுமையாக உழைத்திட்ட அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து 76 இடங்களை வழங்கிய தமிழக மக்களுக்கும் தமிழக பா.ஜ., சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here