எந்த இடத்திலும் மறு ஓட்டு எண்ணிக்கை தேவையில்லை : சத்யபிரத சாஹூ

0
5
election

சென்னை: தமிழகத்தில் எந்த இடத்திலும் மறு ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் கோராததால், மறு ஓட்டு எண்ணிக்கை தேவையில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் வெற்றி பெற்றன. மே 7ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ செய்தியாளர்களிடம் பேசியதாவது: சட்டசபை பொதுத்தேர்தல் மிகவும் சவாலானதாக இருந்தது. தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற்றப்பின் இன்று மாலை கவர்னருக்கு அறிக்கை சமர்பிக்கப்படும்.

தமிழகத்தில் எந்த இடத்திலும் மறு ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் கோரவில்லை. எனவே, மறு ஓட்டு எண்ணிக்கை தேவையில்லை. எம்.பி.,க்களாக உள்ள கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எடுக்கும் முடிவின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here