”வன்முறையை தடுத்து நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்” – மம்தாவுக்கு பாஜக எச்சரிக்கை

0
16
mamtha

புதுடில்லி:

வன்முறையால் மேற்குவங்கம் பற்றி எரிகிறது. உடனே கட்டுப்படுத்துமாறு பா.ஜ., எம்.பி பர்வேஷ் சாஹிப் சிங் மம்தாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பர்வேஷ் சாஹிப் சிங் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்களால் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றன. ஓட்டு எண்ணிக்கை நாளன்று அசன்சோலில் உள்ள பா.ஜ.க அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. தொண்டர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்.

திரிணமுல் தலைவர்கள் உ.பி., அல்லது பீகார் செல்லும் போது மேற்குவங்கத்தை போல தாக்கப்பட்டால் அவர்கள் எப்படி உணர்வார்கள். ஆகவே கட்சி தொண்டர்கள், எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் தங்களின் வரம்பில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வெற்றியும் தோல்வியும் தேர்தலின் ஒரு பகுதியாகும். இந்நிலையில் திரிணமுல் கட்சி தொண்டர்கள், பாஜக தொண்டர்களை கொலைவெறி தாக்குதலும், வாகனங்களை உடைப்பதும், வீடுகளுக்கு தீ வைப்பதையும் நிறுத்த வேண்டும். அவர்களை கட்சி தலைவராகிய நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.

முதல்வராகிய நீங்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் எல்லாம் டில்லி வந்து செல்ல வேண்டும் என்று நினைவில் கொள்ளுங்கள். இதை ஒரு எச்சரிக்கையாக கருதுங்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here