சட்ட மன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு

0
6
m.k.staline

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக தனித்து 125 பேர்களும், கூட்டணியில் சேர்த்து 159 பேர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனவே தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க போகிறது. அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சட்டமன்ற உற்ப்பினர்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்து வருகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்பட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சட்ட மன்ற தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது சட்டம்.

அதன்படி சட்ட மன்ற கட்சித் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். நாளை ஆதரவு பட்டியலை கவர்னரிடம் கொடுத்து தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here