தென்திருப்பேரையில் சொட்டுநீர் பாசன விழிப்புணர்வு முகாம் – விவசாயிகளுக்கு இயக்குனர் அழைப்பு!

0
18
thenthiruperai

நாசரேத்,ஜுலை.19: தென்திருப்பேரையில் சொட்டுநீர் பாசன விழிப்புணர்வு முகாம் நடக்க இருக்கிறது. அந்த முகாமில் பங்கேற்குமாறு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை ஆழ்வார்திருநகரி வட்டாரக்கல்வி இயக்குனர் செல்வி. சி. சசிகலா அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து சி. சசிகலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரு துளி நீரில் அதிக பயிர் என்னும் நோக்கில், தோட்டக்கலைப் பயிர்களான, வாழை, காய்கறி, பழப்பயிர் மற்றும் பூக்கள் ஆகியவற்றிற்கு சொட்டுநீர் பாசனம் அமைத்து நீரை சிக்கனமாக செலவு செய்வது விவசாயிகளின் கடமை.

சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 7.5 சதவிகித மானியமும் தரப்படுகிறது. குரு விவசாயிகளுக்கு 2.5 ஏக்கருக்கும், பெரிய விவசாயிகளுக்கு 12.5 ஏக்கருக்கும் அதிகப் பட்சமாக மானியம் தரப்படுகிறது.

ஆழ்வார்திருநகரி ஒன்றியத்திலுள்ள விவசாயிகள் பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்திலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அனுகி பயனடையலாம். மேலும் இத்திட்டம் குறித்து முழு விபரங்களை தெரிந்து கொள்ளலாம். சொட்டுநீர் நிறுவனங்களில் பொருட்காட்சியும் செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்படும்.

முகாம் 07.06.2019 முதல் நடைபெற்று வருகிறது. அன்றாடம் மாலை 3.00 மணிக்கு முகாம் நடைபெறும். ஆகையால் விவசாயிகள் கூடுதல் விவரங்களைப் பெற தோட்டக்கலை உதவி அலுவலர்கள் 8610394768, 9786964030, 9488563722, ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஆகவே விவசாயிகள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here