காவேரி ஆற்றில் எந்திரம் மூலம் மணல் அள்ளுவதாக வைரலாகும் வீடியோ

0
73
kaveri

திமுக ஆட்சிக்கு வந்தால் ஆற்று மணலை அள்ளிவிடுவார்கள் என அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கூறி வந்தனர். தேர்தல் சமயத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அது போன்று 11.00 மணிக்கு தளபதி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் 11.05க்கு நீங்க ஆற்றுக்குள் மணல் அள்ள வண்டியை கொண்டு போகலாம். யாராவது அதிகாரிகள் தடுத்தால் என்று பேசுவதுபோல் ஏற்கனவே ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் தேர்தல் முடிந்து திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆனால் இன்னும் யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வலம் வருகிறது. அந்த வீடியோ பரந்து விரிந்த ஆற்றுக்குள் ஒரு எந்திரம் இறக்கிவிடப்பட்டிருக்கிறது. அந்த எந்திரம் மணல் அள்ளுவதற்கு தயார் ஆகி வருவதுபோல் வீடியோ எடுத்தவர்கள் பேசிக் கொள்வது கேட்கிறது.

அதை வைத்து பார்க்கும்போது ஆற்றில் மணல் அள்ளுவது போல்தான் இருக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது ஏற்கனவே திமுகவுக்கு எதிராக பேசியவர்கள் கூறியது போல்தான் இருக்கிறது. இதை முதலமைச்சராகப்போகும் மு.க.ஸ்டாலின் ஆரம்பத்திலேயே கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் விருப்பமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here