கொரோனா நிதி ரூ.4 ஆயிரம், பெண்களுக்கு இலவச பயணம்; முதல்வர் ஸ்டாலின் போட்ட 5 கையெழுத்து

0
34
staline

சென்னை: சென்னை தலைமைசெயலகத்திற்கு சென்ற ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் முதல் கையெழுத்தாக, கொரோனா நிவாரணமாக, ரூ.4000 ஆயிரம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.

முதல் கையெழுத்தாக 2.07 கோடி அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரணமாக, ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். முதல் தவணையாக, இம்மாதமே ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 ஆக குறைப்பு

அரசு உள்ளூர் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்கான அடையாள அட்டை வழங்கப்படும். நாளை முதல் பெண்கள் பயணிக்கலாம்.

மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்தல்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும்.

இவ்வாறு 5 கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் தனிச்செயலர்களாக, உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ். சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பதவியேற்ற பின்னர் முதல்வர் ஸ்டாலின் , நேராக கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லம் சென்றார். அங்குள்ள கருணாநிதியின் உருவபடத்திற்கு கண்ணீர் விட்டபடி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உறவினர்கள் அவரை தேற்றினர். அதை தொடர்ந்த தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார்.

கோபாலபுரத்திலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாநினைவிடம், கருணாநிதி நினைவிடம் சென்று பூக்கள் தூவி மரியாதை செலுத்தினார். ஸ்டாலின் மனைவி துர்கா மற்றும் உதயநிதி ஆகியோரும் மலர்துாவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் அங்கிருந்து முன்னாள் மறைந்த திமுக பொது செயலாளர் அன்பழகன் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தார். அதை தொடர்ந்து தலைமை செயலகம் சென்று முதல்வராக பொறுப்பேற்று 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here