வனத்திருப்பதி ஸ்ரீஸ்ரீனிவாசப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு!

0
147
vanathiruppathi

நாசரேத்,ஜன.08:தூத்துக்குடி மாவட்டம்,நாசரேத் அருகிலுள்ள வனத்திருப்பதி புன்னை

ஸ்ரீஸ்ரீனிவாசப்பெருமாள்,ஸ்ரீஆதிநாராயணர்சிவனைந்தப்பெருமாள்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் நேற்று மாலை சரியாக 6:30 மணிக்கு திறக் கப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று பெருமாளை சேவித்தனர்.

வனத்திருப்பதி ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவிலில் நேற்று திங்கள்கிழமை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறப்பும், 5:30 மணிக்கு கோ பூஜையும், காலை 6 மணி முதல் அனந்த சயன சேவையும், பகல் 1மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும் (அபிஷேகமும்),மாலை 6:30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பும், அதை தொடர்ந்து திருவீதி உலாவும் நடைபெற்றது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னை ஓட்டல் சரவண பவனின் இனிப்பு ரவா கேசரி பிரசாதம் வழங்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர்.சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆர்.சரவணன், சிற்பி கணேசன் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிறுவனரும், நிர்வாக கைங்கர்யதாரருமான பி.ராஜகோபால் புதல்வர்கள் பி.ஆர்.சிவக்குமார்,ஆர்.சரவணன் ஆகியோர் உத்திரவின் பேரில் கோவில் மேலாளர் டி.வசந்தன் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here