நாசரேத்,ஜன.09:நாசரேத்-கந்தசாமிபுரத்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியை நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவரும், நாசரேத் நகர திமுக செயலாளருமான அ.ரவி செல்வக்குமார் துவக்கி வைத்தார்.
மணிநகர் திரி ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பாக கிரிக்கெட் போட்டி கந்தசாமிபுரம் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. போட்டியை நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவரும், நாசரேத் நகர திமுக செயலாளருமான அ.ரவி செல்வக்குமார் துவக்கி வைத்தார். போட்டிகளில் நாசரேத் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது.
இறுதிப்போட்டி வருகிற 11-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.இறுதிப் போடடியில் வெற்றி பெறும் அணிக்கு ரூபாய் 5 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மணிநகர் திரி ஸ்டார் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.