திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மோகன் சி லாசரஸ் ரூ.5 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கல் !

0
40
mohan c lazaras

தூத்துக்குடி,மே.18:

திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனிடம், நாலுமாவடி மோகன் சி லாசரஸ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு என் 95 மாஸ்க், ப்ளோமீட்டர், பல்ஸ் மீட்டர், சானிடைசர், கையுறைகள், தெர்மல் தெர்மாமீட்டர், இருமல் மருந்துகள் உள்பட ரூ.5 லட்சம் மதிப்பிலான பல்வேறு கொரோனா நிவாரண உதவி பொருட்களை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் சார்பில் அதன் நிறுவனர் மோகன் சி லாசரஸ், மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அதனை அமைச்சர், திருச்செந்தூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்ரவியிடம் ஒப்படைத்தார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் டி.எஸ்.பி ஹர்ஸ்சிங், திருச்செந்தூர் சப்-கலெக்டர் தனப்பிரியா, திருச்செந்தூர் தாசில்தார் முருகவேல், திமுக மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே.ஜெகன், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஸ், மற்றும் நிர்வாகிகள் வால்சுடலை, சுதாகர், அருணகிரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here