ஆறாம்பண்ணையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் !

0
54
srivai

ஸ்ரீவைகுண்டம், ஜன.10

ஆறாம்பண்ணையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

தமிழக அரசின் சார்பில் தமிழக மக்கள் பாரம்பரியம்மிக்க பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழும் வகையில் ரேசன் கடைகள் மூலமாக ஆண்டுதோறும் ஆயிரம் ரூபாய், கரும்பு, சர்க்கரையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி இந்தாண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவின்அடிப்படையில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆறாம்பண்ணை ரேசன் கடையில் ரேசன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு ஆழ்வாற்கற்குளம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அய்யாத்துரைப்பாண்டியன் தலைமை வகித்தார். ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் ஷேக்அப்துல்காதர் முன்னிலை வகித்தார். ரேசன் கடை விற்பனையாளர் சீனி வரவேற்றார்.

விழாவில், ஆழ்வாற்கற்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கிருஷ்ணன், தலைவர் அய்யாத்துரைப்பாண்டியன் ஆகியோர் ரேசன் கார்டுதார்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர்.

இதில், ஊராட்சி செயலாளர் அப்துல்கனி, கவுன்சிலர்கள் இப்ராகிம், அப்துல்கனி, கிராம நிர்வாக அலுவலர் கமல்ராஜ், இயக்குனர் ஜாகிர்உசேன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதுபோன்று கொங்கராயகுறிச்சி, ஸ்ரீவைகுண்டம் உட்பட அனைத்துப்பகுதி ரேசன் கடைகளிலும் நேற்று ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் துவங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here