நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா.. போட்டதுபோல் நடித்தாரா..? அவரே விளக்கம் அளிக்க வேண்டும்

0
77
nayantharaa news

கொரோனா பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளிலும் சுழன்று வருகிறது. சாமான்ய மக்கள் முதல், அரசியல், சினிமா உள்ளிட்ட பிரபலங்கள் வரை தடுப்பூசி போட்டு வருகிறார்கள். இதில் சிலர் முரண்படவும் செய்கிறார்கள்.

இந்தநிலையில் நேற்று தனது நண்பருடன் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற நடிகை நயன்தாரா, தடுப்பூசி போட்டுக் கொண்டார். அது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவாகியது. அதை பார்த்த வலைதளவாசிகள், நயன்தாரா ஊசி போட்டதாக வெளியான போட்டோவில் ஊசியே தெரியவில்லை. உண்மையில் ஊசிபோட்டுக் கொண்டாரா அல்லது அதுபோல் பாவ்லா காட்டுகிறாரா என்று கேள்வி கேட்டு மீம்ஸ் போட்டனர். தற்போதுவரை அது விரைவாக சென்று கொண்டிருக்கிறது.

ஊசிப்போடுவதில் நம்பிகை ஏற்படுத்துவதற்கே பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியிடப்படுகிறது. இப்படியொரு பிரபலம் மீது சந்தேகம் வருமானால் அந்த பணியிலும் மக்களுக்கு சந்தேகம் வந்துவிடும். எனவே குறிப்பிட்ட அந்த நடிகை, இது குறித்து விளக்க அறிக்கை வெளியிட வேண்டும் என்பதே நடுநிலையாலர்களின் விருப்பமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here