திருச்செந்தூரில் போலீசாருக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள்

0
196
ticr

திருச்செந்தூர், மே,29:

திருச்செந்தூரில் கொரோனனா தடுப்பு பணியில் முன்களப்பணியாளர்களாக செயல்படும் 125 போலீசாருக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள், அரிசயை போலீஸ் ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் வழங்கினார்.

திருச்செந்தூர் பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்படும் முன்களபணியாளர்களாக செயல்படும் போலீசாருக்கு அவர்களது பணியை பாராட்டும் வகையிலும், ஊக்கப்படுத்தவும் காய்களிகள், மளிகை பொருட்கள், அரிசி ஆகியவற்றை ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் வழங்கினார். தாலுகா ஸ்டேஷன் போலீஸ், கோயில் போலீசார்,

போக்குவரத்து போலீசார் என 125 பேருக்கு இந்த பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞா£னசேகரன், சப் இன்ஸ்பெக்டர்கள் அந்தோணி துரைசிங்கம், போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், கோயில் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் கல்யாணராமன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெபசீலன் பிராங்களின், செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் துரைசிங், துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், செந்தூர் நண்பர்கள் நலக்அறக்கட்டளை பொருளாளர் கார்க்கி, திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க தலைவர் காமராசு, செயலாளர் செல்வகுமார் உடப்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here