மேற்கு வங்கத்தில் நடக்கிறது திரிணமுல், காங்கிரஸில் பாஜகவினர் இணையும் சடங்கு

0
222
mamtha news

கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன், பா.ஜ.,வுக்கு சென்ற பலர், மீண்டும் திரிணமுல் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த தலைவர் முகுல் ராய் பெயரும் அதில் உள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. சமீபத்தில் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. முன்னதாக, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் இருந்து, திரிணமுல் காங்.,கில் இருந்து விலகிய பல மூத்த தலைவர்கள், பா.ஜ.,வில் இணைந்தனர். சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்., வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், பா.ஜ.,வுக்கு சென்ற பலர், மீண்டும் திரிணமுல் காங்.,குக்கு புலம் பெயர ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

நீரில்லாத மீன் போல் உணர்வதாக, முன்னாள் பெண் எம்.எல்.ஏ., சோனாலி குஹா, சமீபத்தில் மம்தாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். திரிணமுல் கொடியை ஏந்த துடிப்பதாக, முன்னாள் கால்பந்து வீரர் திபேந்து பிஸ்வாஸ் கடிதம் எழுதியிருந்தார். இவ்வாறு பலர், திரிணமுல்லில் மீண்டும் சேருவதற்கு துாது விட்டு வருகின்றனர். ”பா.ஜ.,வில் தற்போது, எம்.பி., – எம்.எல்.ஏ.,வாக உள்ள, 34 பேர் திரிணமுல் காங்.,கில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்,” என, திரிணமுல் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறியுள்ளார்.

திரிணமுல்லில் இருந்து முதல் முதலில் விலகிய, மூத்த தலைவர் முகுல் ராய், மீண்டும் திரும்ப போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ”சட்டசபை தேர்தலில் வென்று பா.ஜ., ஆட்சி அமைக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அதனால், அந்த கட்சியில் இருந்து விலகி பலர், பா.ஜ.,வில் சேர்ந்தனர். அவர்கள் எதற்காக கட்சி மாறுகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும்,” என, பா.ஜ., மூத்த தலைவர் ஷாமிக் பட்டாசார்யா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here