கொரோனா தகவல்களை stopcoronatuti.in இணையதளத்தில் காணலாம் கலெக்டர் தகவல்

0
7
coleector news

தூத்துக்குடி,ஜூன்.8:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொடர்பான அனைத்து தகவல்களையும், stopcoronatuti.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் இணையதள சேவை துவக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கலந்துகொண்டு இணையதள சேவையை துவக்கிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது, பொதுமக்கள் stopcoronatuti.in என்ற இணையதளத்தில் தினசரி எடுக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை விபரங்கள், கொரோனா தொற்று விபரங்கள் குணமடைந்தோர் எண்ணிக்கை, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் விபரங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் தடுப்பூசி மருந்துகள் இருப்பு விபரங்கள், தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விபரங்கள், காய்சல் மற்றும் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்தும், பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் வார் ரூம் தொடர்பு எண்களும்,உதவி மையங்களின் தொடர்பு எண்களும், இலவச தொலைபேசி எண்களும் இச் சேவையில் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலக மருத்துவர் சோமசுந்தரம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here