இந்தியாவில் இதுவரை 2.75 கோடி பேர் கோவிட் பாதிப்பிலிருந்து நலம்

0
7
medical

புதுடில்லி: நாடு முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில், தொடர்ந்து 2வது நாளாக தினசரி பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்தது. இதுவரை 2.75 கோடி பேர் நலமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 92,596 பேர் மட்டுமே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 90 லட்சத்து 89 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 1,62,664 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 75 லட்சத்து 04 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 12.31 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,53,528 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (ஜூன் 9-ம் தேதி) காலை 10:15 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 17 கோடியே 47 லட்சத்து 49 ஆயிரத்து 068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37 லட்சத்து 62 ஆயிரத்து 883 பேர் பலியாகினர். 15 கோடியே 81 லட்சத்து 57 ஆயிரத்து 982 பேர் மீண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here