தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள், துணைத் தலைவர்கள் யார் யார் ?

0
146
tuty unions

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 12 ஒன்றியங்களில் 17 மாவட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 174 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 403 பஞ்சாயத்து தலைவர்கள், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தூத்துக்குடி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 17 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 16-ல் திமுக வேட்பாளரும், ஒரே ஒரு வார்டில் அதிமுக வேட்பாளரும் வெற்றி பெற்றிருந்தனர். இதை தொடர்ந்து தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் திமுக வசம் என்றானது. இருப்பினும் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் மறைமுகமாக நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தபடியால் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில

  1. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவராக திமுகவை சேர்ந்த வசுமதி அம்பாசங்கர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக கோவில்மணி ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டார்.
  2. ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் ரமேஷ், துணைத்தலைவராக காசி விஸ்வநாதன்
  3. கருங்குளம் ஒன்றியத்தலைவராக அதிமுக வேட்பாளர் கோமதி, துணைத்தலைவராக லெட்சுமணப்பெருமாள்
  4. ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தலைவராக திமுக வேட்பாளர் ஜனகர், துணைத்தலைவராக ராசாத்தி
  5. விளாத்திகுளம் ஒன்றியத்தலைவராக அதிமுக வேட்பாளர் முனியசக்தி,
    துணைத்தலைவராக சுப்புலட்சுமி (பாஜக).
  6. ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தலைவராக அதிமுக வேட்பாளர் வசந்தா, துணைத்தலைவராக விஜயன்
  7. புதூர் ஒன்றியத்தலைவராக அதிமுகவை சேர்ந்த சுசீலா, துணைத்தலைவராக திருச்செல்வி
  8. திருச்செந்தார் ஒன்றியத்தலைவராக அதிமுகவை சேர்ந்த செல்வி, துணைத்தலைவராக ரெஜீபட் பர்னாந்து
  9. கயத்தார் ஒன்றியத்தலைவராக அமமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்க ராஜா, துணைத்தலைவராக மீரா
  10. உடன்குடி ஒன்றியத்தலைவராக திமுகவை சேர்ந்த பாலசிங், துணைத்தலைவராக மீரா
  11. சாத்தான்குளம் ஒன்றியத்தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜெயபதி, துணைத்தலைவராக அப்பாத்துரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் கருங்குளம், உடன்குடி, சாத்தான்குளம், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களைத் தவிர மற்ற ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் உள்ள 12 ஒன்றியங்களில், அதிமுக 6 இடங்களையும், திமுக 4 இடங்களையும், அமமுக 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளன. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலனுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவால் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுகதேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here