ஊரடங்கு சமயத்தில் எப்படி போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்..? ஏற்படுகிறதே என்ன செய்வது ..?

0
4
lock

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சமூக இடைவெளி அவசியம் என்கிற அடிப்படையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டு தடவைக்கு மேலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்கிற நிலையில் தமிழக அரசு, வருகிற 14ம்தேதி வரை ஊடரங்கை அமலில் வைத்திருக்கிறது.

கடந்த 7ம் தேதி ஊரடங்கிற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பில் சற்று கூடுதலாக தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்ததோடு சரி, மக்கள் தாராளமாக வெளியில் சுற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.

இதில் யாரையும் குறை சொல்வதற்கில்லை. ரொம்பவும் கெடுபிடி செய்கிறார்கள் என்று மக்கள் சொல்லிவிட கூடாது என அரசு நினைக்கிறது. ரொம்பவும் கெடுபிடி செய்தால் பிழைப்புக்கு என்ன வழி என்று மக்கள் கேட்கிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் கொரோனா ஒரு புறம் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. நகரத்தை தாண்டி கிராமங்களிலும் புகுந்து காட்டு விலங்கு தோட்டத்தை அழிப்பது போல் கச்சைக் கட்டிக் கொண்டிருக்கிறது.

டெஸ்ட் அதிகமாக எடுத்தால் அதிகமானோருக்கு அறிகுறி தெரியும் என்கிற நிலைதான் தற்போது இருக்கிறது. இதற்கிடையே தடுப்பூசி பற்றாக்குறை வேறு ஒரு புறம் பயமுறுத்துகிறது. ஆக அரசும் மக்களும் என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் இருக்கிறார்கள். வந்தது வரட்டும் என்கிற எண்ணத்தில் அவரவர் வேலையை செய்ய துணிந்துவிட்டதாகவே தெரிகிறது.

ஊரடங்காக இருந்தாலும், கடைகள், நிறுவனங்கள் திறக்கபட்டதால், வாகனங்களின் ஓட்டமும் அதிகரித்துவிட்டது. ஏற்கனவே மென்மை போக்கை கடைபிடித்த போலீஸார், கூடுதல் மென்மை போக்கை கடைபிடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தற்போது தமிழகத்தில் பல இடங்களில் கொரோனாவுக்கான ஊரடங்குபோல் தெரியவில்லை.

வாகனங்களில் அணிவகுப்பால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அவற்றை சரி செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் போலீஸார். இந்த நிலையில் யாரையும் குறை சொல்வதற்கில்லை. என்றாலும் எந்தவிபரீதமும் வராமல் இருக்க, ஒவ்வொரு தனிமனிதனும் நிலையை கருத்தில் கொண்டு ஒதுங்கி வாழ வேண்டும் அவ்வளவுதான்.

மற்றதை கவனிக்காவிட்டாலும் போலீஸார், ரோட்டோரத்தில் தேவையில்லாமல் நின்று பேசிக் கொண்டிருப்போரை அப்புறப்படுத்தலாம். அதுபோல் அனுமதிக்காத கடைகள் திறப்பதை கண்டுபிடித்து மூடச்செய்யலாம். அதன் மூலம் நோய் பரவுவதை ஓரளவு தடுக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி பாதிப்பு அதிகம் இல்லை என்று சொல்லப்படும் தகவல் உண்மையாக இருந்தால் நல்லதே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here