முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியில் +2, டிப்ளமோ மாணவ, மாணவியருக்கு இலவச ஆன்லைன் வினாடிவினா போட்டி

0
72
news

தூத்துக்குடி,ஜூன் 12,

தூத்துக்குடி முள்ளக்காட்டில், எந்த ஒரு கல்விக்கட்டணமும் இன்றி, சிறந்த பொறியியல் கல்வியை மாணவர்களுக்கு அளித்துவரும், கிரேஸ் பொறியியல் கல்லூரி, +2 மற்றும் டிப்ளமோ மாணவ மாணவியருக்கென்று “கிளிக் & வின்” (Click & Win) என்ற இலவச ஆன்லைன் பொது அறிவு (GK) வினாடிவினா போட்டியை வரும் ஜூன் மாதம் 14 ம் தேதியிலிருந்து நடத்த உள்ளது.

இந்தப் போட்டி, பதிவுக் கட்டணம் எதுவும் இன்றி, முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில், 30 பொது அறிவு கேள்விகள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைந்திருக்கும். சரியான விடையை மாணவர்கள் கிளிக் செய்தால் மட்டும் போதும். இந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், www.gracecoe.org என்ற இணையதளத்தின் மூலம் பங்கேற்கலாம்.

அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட் ஃபோன் , ஸ்மார்ட் வாட்ச் போன்ற நவீன காலத்திற்கேற்ற பயனுள்ள சிறந்த பரிசுகள் வழங்கப்படும். இந்த போட்டி குறித்து மேலும் விவரங்களை 9585511757 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் பொது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளவும், சிறந்த பரிசுகளை வெல்லவும் வாழ்த்துவதாக, கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ். ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here