காங்கிரஸ் கட்சியிலிருந்து கார்த்திக்ராஜா நீக்கம் – கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

0
81
k.s.azahiri

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குள்பட்ட தண்டுபத்து ஊரை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா. காங்கிரஸ் பிரமுகரான இவர், அதிரடியாக அரசியல் பேசுவது வழக்கம்.

இந்தநிலையில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி செய்த பரிந்துரையின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், திருச்சந்தூர் தண்டுபத்து கிராமத்தை சேர்ந்த டி.டி.கே.கார்த்திக்ராஜா என்பவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். இவருடன் காங்கிரஸ் கட்சியினர் எவரும் எந்த விதமான தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்’’ இவ்வாறு அறிக்கையில் கூறியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here