நாளை டாஸ்மாக் கடைகள் திறக்க இருக்கும் நிலையில், குரும்பூர் அருகே கள்ளச்சாராயம் ஊரல் அழிப்பு

0
44
police news

நாசரேத், ஜூன் 13-

கொரோனா ஊரடங்கிற்கு நடுவில் டாஸ்மாக் மதுக்கடைகளும் அடைக்கப்பட்டிருக்கிறது. மதுக்கடை அடைக்கப்பட்டிருப்பதால் மதுப்பிரியர்களின் பாடு சங்கடமாகிப்போனது. எப்படியாவது குடித்தாக வேண்டும் என்று ஆர்வத்தோடு சுற்றித்திரிபவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வ மிகுதியை சாதகமாக பயன்படுத்தும் நோக்கில் சிலர் கள் பதனீர் மற்றும் கள்ளச்சாராயத்தை கள்ளத்தனமாக விற்பனை செய்ய தொடங்கிவிட்டனர். அதை கண்டுபிடித்து போலீஸார் அழித்து வருகின்றனர்.

அந்தவகையில் குரும்பூர் – ஏரல் இடையே கள்ளச்சாராய ஊரலை கண்டுப்பிடித்த போலீசார் அதனை அழித்திருக்கிறார்கள். அதில் ஈடுபட்டுவந்த இரண்டுபேரை தேடி வருகிறார்கள்.

அங்கே கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதனை கண்டுப்பிடித்து அழிக்க மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசனுக்கு உத்தரவிட்டார். ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி, சப் இன்ஸ்பெக்டர் தாமஸ், ஸ்ரீவைகுண்டம் தனிப்பிரிவு எஸ்ஐ ஜெகநாதன், ஏட்டுகள் லட்சுமணன், தனிப்பிரிவு போலீஸ் சந்தோஷ் செல்வம் ஆகியோர் குரும்பூரிலிருந்து ஏரல் செல்லும் ரோட்டில் ரோந்து சென்றனர்.

அப்போது ராஜபதி பனங்காட்டுக்குள் மர்ம நபர்கள் 2 பேர் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்ட அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடினர்.

தகவலறிந்த எஸ்பி ஜெயக்குமார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து 20 லிட்டர் ஊரலை அழித்து, கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய கேஸ் அடுப்பு, கேஸ் சிலிண்டர் மற்றும் 2 பானைகளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து எஸ்பி ஜெயக்குமார் தப்போடிய இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இதுகுறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க இருக்கிற நிலையில் கள்ளச்சாராயம் காய்ச்சு விற்பனை செய்யும் ஊரல் அழிக்கப்பட்டிருப்பது விஷேசமாக பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here