பரிகார பூஜை நடத்துவதாக 14 பவுன் நகை மோசடி : தனியார் கல்லூரி ஊழியா் மீது வழக்கு

0
27
crime

தூத்துக்குடி அருகே பரிகார பூஜை நடத்துவதாக கூறி மேலும் 2 பெண்களிடம் 14 பவுன் நகை மோசடி செய்த தனியாா் கல்லூரி ஊழியா் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முத்து நகரைச் சேர்ந்தவர் ஆறுமுக நயினார் மகன் முத்து ராமலிங்கம்(44). இவர் நெல்லை அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேலைபார்த்து வருகிறார். மேலும் ஜோதிடர் போல் பரிகார பூஜைகளும் நடத்தி வந்துள்ளார். இவா் பரிகார பூஜை நடத்துவதாக கூறி பல பெண்களிடம் நகை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் இவர் மீது மேலும் 2 பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிந்தலகட்டை, வடக்குத் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி மாரியம்மாள் (31) என்பவரிடம் பரிகார பூஜை நடத்துவதாக கூறி கடந்த ஏப்.3ம் தேதி 6 பவுன் தங்கச் செயினை பறித்துள்ளார். இதுபோல் எட்டயபுரத்தைச் சேர்ந்த மயில்ராஜ் மனைவி பேபி ஷாலினி (23) என்பவரிடம் கடந்த மே 5ம் தேதி 8 பவுன் நகையை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து புகார்களின் பேரில் ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here